Sunday 21 July 2013

மரியான்- Survival of the fittest

" Welcome to Africa " வில்தொடங்கி " நெஞ்சே எழு " பாடல் வரை நீள்கிறது படம்.


பனிமலர்( பார்வதி ) அப்பாவின் கடனை அடைக்க ஆப்பரிக்கா செல்லும் மரியான்( தனுஷ் ) , தீவிரவாதிகளிடம் மாட்டி சந்திக்கும் சவால்களே "மரியான்".


கடலின் ஆழத்திற்குச் சென்று மீன்களை பிடித்துவரும் திரமையான மீனவர் மரியான்.  அவர் " கடல் ராசா " என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். அவரை சுற்றி வரும் பனிமலர். முதலில் பனிமலர் மீது காதல் கொள்ளாத தனுஷ் பின்னர் அவர் மீது அன்பு கொள்கிறார். இடையில் பனிமலர் மீது ஆசைப்படும் 'திமிரு' படத்தில் நொண்டியாக நடித்த வில்லனின் ( தீக்குச்சி ) சிக்கல் வேறு.



தன் நண்பனின் ( அப்புக்குட்டி ) இழப்பை தாங்கிக்கொள்ள இயலாத மரியான், தீக்குச்சியிடம் தன் காதலியின் அப்பா வாங்கிய கடன் தொகையை அடைக்க சூடான் ( ஆப்பரிக்கா ) செல்கிறார். இரண்டு வருட கான்ட்டராக்ட் முடிந்து திரும்பும் வழியில் அந்த ஊர் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறார் தனுஷ்.
பிறகு அங்கிருந்து தப்பித்து பனிமலரை வந்தடைந்தாரா தனுஷ் ? என்பதே மீதி கதை.
ஆப்பரிக்காவில் தனுஷ் சந்திக்கும் நண்பனாக வருகிறார் ஜகன். ஜகனுக்கு காமேடி ரோல் இல்லை, தீவிரவாதிகளைப் பார்த்து பயப்படுவதிலேயே அவர் காரக்ட்டர் இருக்கிறது.
படத்திற்கு எ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். " கடல் ராசா " , " நெஞ்சே ஏழு " பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்னரே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. பின்னனி இசை ஓகே.
பெல்ஜியம் கேமேராமேனான " மார்க் கொனிக்ஸ் " ( Marc Koninckx ) யின் முதல் தமிழ்ப்படம்.
கடல் காட்சிகளையும் , பாலைவனக் காட்சிகளையும் இனிமையாக படம்பிடித்துள்ளார் .
2010 காமன்வெல்த் கேம்ஸ் " தீம் சாங்கை " இயக்கிய பரத் பாலா இந்த படத்தை இயக்கியுள்ளார் எனினும் சில இடங்களில் இவரது முதல் படம் என தெளிவாகத் தெரிகிறது.
சரி, இந்த படத்திற்கான சந்தேகங்களை பார்ப்போம்,
-- யாரையும் ஈவு இரக்கம் இல்லாமல் " பொட்டு பொட்டு " எனப் பொட்டுத்தல்லும் ஆப்பரிக்கா வில்லன் தனுஷை மட்டும் கடைசி வரைக்கும் ( தன்னை ஏமாற்றினாலும் ) விட்டுவைப்பது.
-- 9 நாட்கள் சாப்பிடாமல் பாலைவனத்தில் வாடும் தனுஷ் கடலில் நீச்சல் போட்டு வில்லனோடு சண்டைபோடுவது.
-- மைக்கேல் பெல்ப்ஸே ஆனாலும் கடைசி சண்டைக்காட்சியை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுபோல சில ஓட்டைகள் படத்தில் பெரிதாகத் தெரிகிறது. தனுஷ் எப்போதும் போல இந்தப் படத்திலும் எளிமையாக நடித்துள்ளார். ஏனினும் '3' பட தனுஷ் அங்கங்கே வந்து போகிறார். கண்டிப்பாக தனுஷுக்கு அடுத்தப் படத்தில் மாற்றம் தேவை. பார்வதி மேனன் அழகாக நடித்துள்ளார்.
" சொக்குப்படி போட்ட சோனாப்பரியா " பாடலுக்கு ஏற்றவாறு பிற்பாதியில் சொக்குப்பொடி போட்டு நம்மை 'சொக்க'வைத்திருக்கிறார் இயக்குனர் பரத் பாலா.
___/\____
----- -------
! நன்றி !

2 comments: