Sunday 21 July 2013

மரியான்- Survival of the fittest

" Welcome to Africa " வில்தொடங்கி " நெஞ்சே எழு " பாடல் வரை நீள்கிறது படம்.


பனிமலர்( பார்வதி ) அப்பாவின் கடனை அடைக்க ஆப்பரிக்கா செல்லும் மரியான்( தனுஷ் ) , தீவிரவாதிகளிடம் மாட்டி சந்திக்கும் சவால்களே "மரியான்".


கடலின் ஆழத்திற்குச் சென்று மீன்களை பிடித்துவரும் திரமையான மீனவர் மரியான்.  அவர் " கடல் ராசா " என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். அவரை சுற்றி வரும் பனிமலர். முதலில் பனிமலர் மீது காதல் கொள்ளாத தனுஷ் பின்னர் அவர் மீது அன்பு கொள்கிறார். இடையில் பனிமலர் மீது ஆசைப்படும் 'திமிரு' படத்தில் நொண்டியாக நடித்த வில்லனின் ( தீக்குச்சி ) சிக்கல் வேறு.



தன் நண்பனின் ( அப்புக்குட்டி ) இழப்பை தாங்கிக்கொள்ள இயலாத மரியான், தீக்குச்சியிடம் தன் காதலியின் அப்பா வாங்கிய கடன் தொகையை அடைக்க சூடான் ( ஆப்பரிக்கா ) செல்கிறார். இரண்டு வருட கான்ட்டராக்ட் முடிந்து திரும்பும் வழியில் அந்த ஊர் தீவிரவாதிகளிடம் மாட்டிக்கொள்கிறார் தனுஷ்.
பிறகு அங்கிருந்து தப்பித்து பனிமலரை வந்தடைந்தாரா தனுஷ் ? என்பதே மீதி கதை.
ஆப்பரிக்காவில் தனுஷ் சந்திக்கும் நண்பனாக வருகிறார் ஜகன். ஜகனுக்கு காமேடி ரோல் இல்லை, தீவிரவாதிகளைப் பார்த்து பயப்படுவதிலேயே அவர் காரக்ட்டர் இருக்கிறது.
படத்திற்கு எ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். " கடல் ராசா " , " நெஞ்சே ஏழு " பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்னரே பெரிய வரவேற்ப்பை பெற்றுள்ளது. பின்னனி இசை ஓகே.
பெல்ஜியம் கேமேராமேனான " மார்க் கொனிக்ஸ் " ( Marc Koninckx ) யின் முதல் தமிழ்ப்படம்.
கடல் காட்சிகளையும் , பாலைவனக் காட்சிகளையும் இனிமையாக படம்பிடித்துள்ளார் .
2010 காமன்வெல்த் கேம்ஸ் " தீம் சாங்கை " இயக்கிய பரத் பாலா இந்த படத்தை இயக்கியுள்ளார் எனினும் சில இடங்களில் இவரது முதல் படம் என தெளிவாகத் தெரிகிறது.
சரி, இந்த படத்திற்கான சந்தேகங்களை பார்ப்போம்,
-- யாரையும் ஈவு இரக்கம் இல்லாமல் " பொட்டு பொட்டு " எனப் பொட்டுத்தல்லும் ஆப்பரிக்கா வில்லன் தனுஷை மட்டும் கடைசி வரைக்கும் ( தன்னை ஏமாற்றினாலும் ) விட்டுவைப்பது.
-- 9 நாட்கள் சாப்பிடாமல் பாலைவனத்தில் வாடும் தனுஷ் கடலில் நீச்சல் போட்டு வில்லனோடு சண்டைபோடுவது.
-- மைக்கேல் பெல்ப்ஸே ஆனாலும் கடைசி சண்டைக்காட்சியை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதுபோல சில ஓட்டைகள் படத்தில் பெரிதாகத் தெரிகிறது. தனுஷ் எப்போதும் போல இந்தப் படத்திலும் எளிமையாக நடித்துள்ளார். ஏனினும் '3' பட தனுஷ் அங்கங்கே வந்து போகிறார். கண்டிப்பாக தனுஷுக்கு அடுத்தப் படத்தில் மாற்றம் தேவை. பார்வதி மேனன் அழகாக நடித்துள்ளார்.
" சொக்குப்படி போட்ட சோனாப்பரியா " பாடலுக்கு ஏற்றவாறு பிற்பாதியில் சொக்குப்பொடி போட்டு நம்மை 'சொக்க'வைத்திருக்கிறார் இயக்குனர் பரத் பாலா.
___/\____
----- -------
! நன்றி !

Monday 18 February 2013

நீயா நானா - சில விளக்கங்கள்


இந்த பதிவு , சமிபத்தில் (10/02/2013) ஒளிபரப்பான "நீயா நானா" நிகழ்ச்சியைப் பற்றி. அதன் உரளி இதோ -




தமிழ்நாட்டு Classroom மாணவர்களுக்கும்  Activitists , NGOஸ்க்கும் நடந்த வாக்குவாதம் அது. சரி இதை ஏன் இப்போ பெரியதாக பேசனும்? இது உங்கள் கேள்வியா இருக்கலாம். ஏன் என்று இந்த பதிவின் முடிவில் விளங்கும். சரி ஆரம்பிக்கலாம்,


"தமிழ்நாட்டின் தலையாய சமூக பிரச்சனை எது?"
இது மாணவர்கள் முன் வைக்கப்பட்ட முதல் கேள்வி. இதற்கு அவர்களிடமிருந்து வந்த முதல் பதில் "மின்சாரம்" . பிறகு பலர் sexual abuse, child labour என்ரெல்லாம் கூறினார்கள். ஆமாம் அதேல்லாம் சரி தான் வேற என்ன என்று கேட்டிருக்கலாம் கோபி, ஆனால் அவ்வாறு கேட்காமல், அதில் உங்களுக்கு எவ்வளவு தெரியும்? அதன் பூர்வீகம் என்ன என்ரெல்லாம் கேட்டார். அதை சரியாக தெரிந்துகொள்ளாமல் மாணவர்கள் பேசுவது போல் சித்தரித்திருந்தார்கள். இது வருத்ததிற்குறியது. அவற்றை சரியாக தெரியாமல் பேசுவது அறியாமைதான் ஆனால் அதையேயே குத்திக்காட்டி பேசுவது தவறு.
பிறகு மாணவர்களிடமிருந்து வந்த பதில் " பெண்களுக்கு பாதுகாப்பின்மை ". இந்த பிரச்சனை சமீபத்தில் நடந்த டில்லி விவகாரத்தால் ஏற்பட்ட விழிப்புணர்வு என்று சொல்லலாம். அதற்கு முன் இவ்வாரான பிரச்சனைகள் பத்தோடு பதிணொன்றாக செய்திகளில் படித்து பார்த்து வந்தனர், ஆனால் இந்த டில்லி விவகாரம் ஊடகங்களால் பெரிதுபடுத்தி காட்டப்பட்டதால் வந்த சமூக விழிப்பூணர்வு.
அடுத்தது போதை பொருட்கள் , ஜாதி பிரச்சனை என ஒவ்வொன்றாக மாணவர்கள் முன்வைத்தனர்.
கூடங்குளம் பிரச்சனை பற்றி பேசியபோது "நீங்கள் அங்கு சென்று பார்த்ததுண்டா?" என்ரெல்லாம் அபத்தமான கேள்விகளை Activitists கேட்டார்கள். இதை யாரும் கண்டுகொள்ளவில்லை.!!
கூடங்குளம் பற்றி பேச வந்த மாணவரையும் பேசவிடவில்லை கோபிநாத்.
பிறகு இந்த Facebook , twitter போன்ற சமூகதளங்களில் இளைஞர்கள் வெறும் பொழுதுப்போக்குக்காகவே பயன்படுத்துகிறார்கள் என்று சொன்னார்கள் , இது ஒரு புறம் உண்மை என்றாலும் இது போன்ற இணையத்தில் மக்கள் அதிகம் தெரிந்துகொள்கின்றனர் என்பதுதான் உண்மை.!
சரி இப்போது இளைஞர்கள் தடுமாறியவற்றைப் பார்க்கலாம்,
* எம்.எ தமிழ் இலக்கியம் படித்த மாணவருக்கு தமிழில் உள்ள எழுத்தாளர்கள்ப் பற்றி தெரியவில்லை. இதை என்ன என்று சொல்லுவது. கேட்டால் தமிழ் ஆர்வத்தை சமூகம் குறைத்துவிட்டது என்கிறார்.
* கிரமப்புர மக்கள் தான் லஞ்சம் கொடுத்து ஆதரிக்கின்றனர் என்று ஒரு பெண் கூறுகிறார்.
* தமிழக மீனவர்கள்ப் பற்றி எனக்கு தெறியாது, NO IDEA என்று சொல்பவர்கள்.!
* நாங்கள் போதைப் பொருட்களைப் பற்றி பேசுவோம் ஆனால் எங்கள் கண்களுக்கு மது பெரிய தப்பாக தெரியாது என்று அவர்கள் உள்ளனர்.!
இன்றைய இளைஞர்கள் சரிவர தெரிந்துகொள்ளாமல் மற்றவரை கிண்டல் அடிப்பதற்கு பழகிவிட்டனர் என்று கோபிநாத் சொன்னதை எற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
இவர்களிடம் பொதுப்பார்வை இல்லை என்று கூறலாம். இவர்கள் தங்களை சுற்றியே பார்த்து சமூகத்தை எடைப்போட்டுவிட்டனர்.!
இந்த சபையில் அடுத்து பெரியதாக விவாதிக்கப்பட்டது "ரிசர்வெஷன்" பற்றி. அதை அனுபவித்தவர்களே அது வேண்டாம் என்று சொல்லுவது சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.!
இறுதியாக ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தை மாணவர்களுக்கு பரிந்துரைத்தனர். அதில் அதிகம் வலியுருத்தப்பட்டது தந்தை பெரியாரின் புத்தகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.!
இந்த பதிவை நான் எழுதுவதற்கு காரணம் பிரசாந்த் அவர்கள் தான் , அவருக்கு நன்றி . இந்த நியா நானா குறித்து அவரது கருத்துக்கள் வீடியோ வடிவில்...



நாட்டில் உள்ள அணைத்து இளைஞர்களும் நாட்டு நடப்பை அறிந்துவைத்துக்கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.!
பதிவை படித்ததற்கு நன்றி.!

Sunday 17 February 2013

HOAX என்றால்??

HOAX
Hoax Messages (ஏமாற்று குறுந்தகவல்கள்)

நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள போகிறே விஷயம் ஹோக்ஸ் (Hoax). அது என்ன ஹோக்ஸ்? அதற்கு முன்னாடி இந்த குறுந்தகவலை படிக்கவும் ,  

Dear brothers and sisters,  I am Renuka,  My no -  94213 *****,  I am suffering from Heart disease.  Doctors say that I have to get into a operation that costs 10 lakhs, if you forward this message to 1 person I will get 1 Paisa.  All telecom companies agreed to pay. Please forward this message to maximum number of people as fast as you can and save my life"

இது ஒரு SMS மெசேஜ் . இதில் ரேணுகா என்பவருக்கு  இதய நோய் என்றும் , அதை குணப்படுத்துவதற்கு செலவாகும் தொகையை  நாம்  இந்த மெஸேஜ்யை மற்றவர்களுக்கு அனுப்புவதன்மூலம்  பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த  மெஸேஜ் நமக்கு நம் நண்பர்கள் மூலமாக வரும். நாம் இதை பரிதாபப்பட்டு ஒரு 10 பேருக்கு அனுப்புவோம். அவ்வாரே இது அனைவரையும் சென்றடையும்.

இந்த மாதிரி குறுந்தகவல்களை 'HOAX MESSAGES' என்றழைப்பார்கள். இந்த குறுந்தகவல் முழுக்க முழுக்க கட்டுக்கதையே! இவை யாரோ ஒருவரால் எழுதப்பட்டு அனுப்பபடுகின்றன. [மேலே இருப்பது என்னுடைய கற்பனையே!]

சரி எதற்காக இந்த மாதிரி ஹோக்ஸ்கள் அனுப்பபடுகின்றன? நான் எடுத்துக்காட்டாக கூறியுள்ள மெஸேஜினால்ஆபத்து வர வாய்ப்பில்லை ஆனால், இந்த மாதிரி ஹோக்ஸ்களை பயன்படுத்தி சிலர் "MARKETING" செய்ய ஆரம்பித்துள்ளனர். இது ஆபத்தான விஷயம். அதாவது ஒரு இணையதளத்தின்(WEBSITE) அல்லது ஒரு விளைபொருளின் இணைய இணைப்பை அனுப்பி, இதை பத்து பேருக்கு அனுப்பினால் ரீசார்ஜ் ஆகும் என்று கூறி குருந்தகவல்கள் வரும். அதை கிளிக் செய்தால் அவ்வளவுதான், அபெஸ்..!!!

இது போன்ற குறுந்தகவல்களை நம்பி அனுப்புபவன் முட்டாள் என்று கூற முடியாது! எனெனில் அவன் முட்டாள் ஆக்க பட்டுள்ளான்.! கையில் ஒரு செல் போனையும் அதில் அளவுக்கு அதிகமான SMS வசதிகளை வைத்திருப்பவன் தான் இது போன்றவறை நம்பி அனுப்புவான். (அவர்களுக்கே இது வேலை செய்யாது என்றுகூட தெரிந்திருக்கும்!)

இதில் இன்னும் வருத்ததிற்குரிய விஷயம், இந்த குறுஞ்செய்தி  உண்மையானது , இது பிரபல நாளிதழில் வந்துள்ளது என்று கூறி குறுஞ்செய்தி வருவதுதான்.!

இதையேல்லாம் நம்புவதற்கு நாம் மூடர்கள் அல்ல! அனைவருக்கும் 'சுயஅறிவு' என்று ஒன்று இருக்கிற்து.

* ஒரு தொலைதொடர்பு நிறுவனத்தால் எவ்வாறு ஒருவருக்கு 1 மெஸேஜ்க்கு 1 பைசா  விகிதம் வாரி வழங்க முடியும்? (அதுவும் பரிதாபப்பட்டு!)

* நிங்க மெஸேஜ் செய்வதற்கும்  உங்கள் USSD கும் [UNSTRUCTURED SUPPLEMENTARY SERVICE DATA] என்ன சம்பந்தம்?

* "நாளிதழில் வந்துள்ளது" போன்ற  மெஸேஜை  சரிபார்த்ததுண்டா?

இது போன்ற பல கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இல்லை! இவைகளை அனுப்புபவரை கைது செய்ய சட்டம் உண்டு ஆனால் அவர்களை கண்டுப்பிடிப்பது அரிது!

என்னதான் இப்போது வாட்சப் (Whatsapp) , வீ சாட் (WeChat) போன்ற நவீன சேவைகள் வந்துவிட்டாலும் ஹோக்ஸ்களின் எண்ணிக்கை  குறைந்தபாடில்லை .

சரி இப்போதைக்கு மாணவர்கள் ஆகிய நாம்  செய்ய வேண்டியது , நமக்கு வரும் HOAXகளை பரப்பாமல் அழித்துவிடுவதுதான்! (இதை  அழித்தால் ஆபத்து என்று வருவதையும் நம்பகூடாது !!)
" SAY NO TO HOAX "


(இந்த தகவல் பிடித்திருந்தால் , Facebook அல்லது  twitterல் SHARE பன்னுங்க அவங்களும் தெரிஞ்சுகட்டும்!!!!)

நன்றி

Wednesday 19 December 2012

நீதானே என் பொன்வசந்தம்

வருண் மற்றும் நித்யாவின் காதல் கதையில் சில தருணங்கள்.

எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல், "புடிக்கல மாமு" பாட்டில் ஆரம்பிக்கும் படம், "போதும் மாமு"னு சொல்ற வரைக்கும் போகுது! முதல் பாதியில் ஜீவா , சமந்தாவின் காதலை சொன்ன கெளதம், பிற்பாதியில் அவர்களின் சண்டைகளையே மிகுதியாக காண்பித்திருக்கிரார்.
"காதல்","சண்டை","காதல்","சண்டை" என்றே படம் நகர்கிற்து.
"CHILLOUT MACHA" என்று சொல்லும் சந்தானம் , படத்திற்கு பலம். பின்னால் காணாமல் போனதால் என்னவோ படம் இழுக்கிறது,. சிறு வயதில் ஜீவா சமந்தாவைக் காடிலும் பெரிதாக தெரிகிறார்.
பல இடங்களில் "விண்ணைத்தாண்டி வருவாயா" எட்டிப்பார்கிறது.
கதை முழுவதையும் தாங்கி நிற்பது இளையராஜாவின் பாடல்கள். முக்கியமான இடங்களில் பின்னனி இசை இல்லாமல் இருப்பது ஒரு புதிய முயற்சியாக் கூட இருக்கலாம். நா.முத்துக்குமார் பாடல் வரிகளே கதையை சொல்லிவிடுகிறது.
திரையில் எப்போதும் வருண் , நித்யா முகம் சலிப்புத்தட்டுகிறது. எவ்வளவு நாள்தான் இந்த மாதிரி காதல் படம் எடுப்பிங்க கெளதம்?
சில இடங்களில் நிளமானகாட்சிகளை தவிர்த்திருக்கலாம். மொத்தத்தில் இந்த படம் முழுக்க முழுக்க காதலர்களுக்கானது. (யாருக்குத் தெரியும், இது அவர்களில் சிலர்க்கும் பிடிக்காமல் போகலாம்!)
SHORT CUT -
> Vtv 2
>This one for youngsters
>Another same kind of flick from GVM

Sunday 25 November 2012

துப்பாக்கி MY (RE)VIEW

துப்பாக்கி MY REVIEW>
THUPPAKI

 ஒரு ஆர்மி ஆபீசெரின் அக்ஷ்ன் மசாலா.

விடுமுறைக்காக வரும் ஆர்மி ஆபீசர் JAGADISH(விஜய்) துப்பறியும் தீவிரவாதம் தான் கதை . அதை முருகதாஸ் தன்  திரைகதையால் மிக விறுவிறுப்பாக கூறியுள்ளார் . போன படத்தில் போதிதர்மன் பற்றி கூறிய   முருகதாஸ் இந்த படத்தில் SLEEPER CELLS பற்றி தெரிவித்துள்ளார் .

தன் முந்தய படக்களில் மசாலா ஹீரோவாக வந்த விஜய் தன்னை மாற்றிக்கொள்ள இந்த படத்தை தேர்தேடுதுள்ளார் . காஜல்க்கு "வருவியா வரமாட்டியா" ரோல் .   வந்தால் என் வந்தனு கேட்குது திரைக்க்தை.


 எதேர்ச்சையாக ஒரு தீவிரவாதியை பிடிக்கும் விஜய், அவன் மூலமாக ஒரு பெரிய தாக்குதல் மும்பையில் பிளான் பண்ணியிருப்பதை தெரிந்துகொள்கிறார். கடைசியாக அந்த சதி திட்டத்தை முறியடித்து sleeper cells தலைவனை பிடித்தாரா என்பது மீதி கதை.

 படம் பார்க்கும் வரை எழாத கேள்விகள் படம் முடிந்தபின் ஒவ்வொன்றாக எழுகின்றன.

 * ஆர்மி ஆபிஸர் என்று சொல்லிக்கொண்டு பிரன்ச்சு தாடியோடு வரும் விஜய்.

 * விஜய் தன் உயர் அதிகாரியான ஜெயராம்க்கு கொடுக்கும் மரியாதை. (நம்ப முடியாது)

 * யாரிடமும் கேட்காமல் அனைவரையும் 'பொட்க்' 'பொட்க்' என பொட்டுத்தல்லும் ஜெகதிஷ்.

 இன்னும் சில.

 படத்துக்கு மிக பொருத்தமாக BGM (பின்னனி இசை) கொடுத்துள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். மற்றபடி இளசுகள் மனதில் நிற்கும் "GOOGLE GOOGLE" சாங். அவ்ளோதான். சத்தியனின் காமெடி ஒகே சொல்லவைக்கின்றன. camera அழகாக மும்பையை வலம் வருகிறது.

 படம் மற்ற விஜய் படங்களை காட்டிலும் நன்றாக உள்ளது. தைரியமாக Familyயோடு "துப்பாக்கி" பார்த்துவிட்டு வரலாம்.

 நன்றி

 உங்கள் கம்ண்ட்ஸை நொக்கி

 -கண்ணன்